மணிரத்னம் படத்திலிருந்து நீக்கப்பட்ட நித்யாமேனன்!

கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா, ஐஸ்வர்யாராய், ஸ்ருதிஹாசன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிப்பதாக முன்பு வேலைகள் நடந்தது. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தபோது சம்பளப் பிரச்சினை காரணமாக மகேஷ்பாபு அப்படத்திலிருந்து விலகினார். அதனால் அந்த முயற்சியையே கிடப்பில் போட்டார் மணிரத்னம். அதையடுத்து, இப்போது மம்மூட்டியின் மகன் துல்கர்சல்மானை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் மணிரத்னம்.

இந்த படத்தின் நாயகியாக முதலில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவிடம்தான் பேசப்பட்டது. ஆனால், இந்தியில் ஹிருத்திக் ரோசனுடன் மொகஞ்சதாரோ என்ற படத்தில் நடித்து வருவதால், தனது இயலாமையை அவர் தெரிவித்து விட்டார். அதனால், பின்னர் நித்யாமேனனிடம் பேசினார் மணிரத்னம்.
ஆனால், அவரை தனது கதாபாத்திரமாக மாற்றி போட்டோ செஷன் நடத்தியபோது எதிர்பார்த்த கேரக்டர் கிடைக்கவில்லையாம். அதனால் நித்யாமேனனை தவிர்த்து விட்டு இப்போது புதுமுக நடிகை வேட்டையில் இறங்கியிருக்கிறார்