அறிமுக நடிகையை ஓங்கி அடித்த தனுஷ் : படப்பிடிப்பில் பரபரப்பு...!

அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வரும் அம்ரியா தஸ்தூர் என்ற நடிகையின் முகத்தில் தனுஷ் குத்தியதால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனுஷ், அம்ரியா தஸ்தூர் மற்றும் பலர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் திரைப்படம் அனேகன்.
இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தனுஷ், அம்ரியா தஸ்தூர் மற்றும் வில்லன்கள் நடித்த சண்டைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது.
இதில் தனுஷ் பின்னால் அம்ரியா நின்றுகொண்டிருக்க, வில்லனை தனுஷ் அடிக்க கையை ஓங்கும்போது அவருடைய கை, பின்னால் நின்றிருந்த அம்ரியாவின் முகத்தில் எதிர்பாராதவிதமாக பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடந்த தவறுக்கு அம்ரிதாவுடன் தனுஷ் மன்னிப்பு கேட்டதாகவும், அம்ரிதாவுக்கு சிறிய முதலுதவி சிகிச்சை செய்த பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.