ஜெய், சுவாதி நடிக்க சரியாக சமைக்கப்படாத 'வட கறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன் நடிக்கும் 'ஒன் நைட் ஸ்டான்ட்' என்ற ஹிந்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவின் நெருங்கிய நண்பரான ராணா டகுபதி ஒப்பந்தமாகியுள்ளாராம். தெலுங்கில் முன்னணி இடத்தைப் பிடிக்கப் போராடி வரும் ராணா டகுபதி ஹிந்தி, மற்றும் தமிழ்ப் படங்களிலும் ஏற்கெனவே நடித்தவர்தான். 'ஆரம்பம்' படத்தில் அஜித்தின் நண்பராக நடித்தவர்தான் இந்த ராணா.
இதற்கு முன் 'தம் மாரோ தம், டிபார்ட்மென்ட், ஹே ஜவானி ஹை தீவானி”, ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நீரஜ் பான்டே இயக்கத்தில் அக்ஷய் குமார், டாப்ஸீ நடிக்கும் 'பேபி' என்ற ஹிந்திப் படத்தில் ராணாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இப்படம் வெளியாகலாம். ஹிந்தியில் அடுத்து அவர் நடிக்க உள்ள படம்தான் 'ஒன் நைட் ஸ்டான்ட்'. இயக்குனர் ஆண்டனி டிசௌசாவின் மனைவியான ஜாஸ்மின் டிசௌசா இப்படத்தை இயக்க உள்ளார். பல விளம்பரப் படங்களை எடுத்துள்ள இவர், கணவரின் படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர். இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
சன்னி லியோன் இந்தப் படத்தில் ஒரு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறாராம். ராணாவுடனான ஒரு சந்திப்பு அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றி விடுகிறது என்பதுதான் படத்தின் கதையாம். தென் ஆப்பிரிக்காவில் விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர், அடுத்த ஆண்டு படம் வெளியாக உள்ளது.
படத்தோட டைட்டிலைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட வேண்டாம், இது ஒரு உணர்வு பூர்மான குடும்பக் கதையாம்...!!

cinema,Rana Daggubathi, Sunny Leone