பொதுவாக மார்க்கண்டேயன் சிவகுமார் நடிகைகளுடன் அதிகம் பழகாதவர், பேசாதவர். ஆனால் முதன் முறையாக அவர் நடிகைகள் பற்றி பேசியதோடு, நடிகைகளிலேயே அழகானவர் வைஜயந்தி மாலாதான் என்று ஒரு ஓவியர் மற்றும் நடிகரின் பார்வையிலிருந்து கூறியிருக்கிறார். மெட்ராஸ் பார் அசோசியேஷன் விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார் இந்த கருத்தை கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது: சிறு வயதில் சிலர் அழகற்று இருக்கலாம். அவர்களது செயலும், சேவையும், நடத்தையும் அவர்களை அழகானவர்களாக மாற்றும்.
மகாத்மா காந்தியும், ஆபிரஹாம் லிங்கனும் அதற்கு உதாரணம். மனிதர்களில் இரண்டு பக்க முகமும் சம அளவில் இருப்பவர்கள் ரொம்ப அபூர்வம். எனக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடது தாடை சற்று பெரிதாக இருக்கும், எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வலது தாடை சற்று பெரிதாக இருக்கும்.
கடந்த 60 ஆண்டுகளில் நான் பார்த்த அளவில் எல்லா லட்சணங்களும், அதாவது ஒரு சிலை வடிக்கும் அளவிற்கு சாமுந்திரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்தவர் நடிகை வைஜயந்திமாலா தான். நம்பாதவங்க அவரோட பழைய படங்களை திருப்பி பாருங்க நான் சொல்வது மிகச் சரி என்று தெரியும். என்றார்.

cinema, Sivakumar, Vaijayanthi mala