குணசேகரன் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 'ருத்ரமாதேவி' படப்பிடிப்பில் ஒன்றரை கிலோ மதிப்புள்ள நகை கொள்ளை போனது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த சிலரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே நகை கொள்ளை போகவில்லை என்றும், ஒரிஜனல் தங்க நகைகளை படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து எடுத்துச் செல்லும் நகைக் கடை ஊழியரின் வீட்டில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இது பற்றிய தகவலை அந்த ஊழியரின் மனைவி நகைக் கடை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்ததாகத் தெரிகிறது.
பின்னர் அந்த விவரம் காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியரின் வீட்டிலிருந்து பத்து கிலோ 'கில்ட்' நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த ஊழியர் விசாரணையின் போது தன் வீட்டில் நகைகள் இருப்பது நகைக் கடையினருக்கு தெரியாது என்றும் சொன்னாராம். படப்பிடிப்பு முடிந்ததும், அவரை நகைகளை எடுத்துச் சென்றது தெரியாமல் காவல்துறையில் நகை காணாமல் போய்விட்டதென்று புகார் அளித்ததாகவும் சொல்கிறார்கள்.
காவல் துறையினர் அந்த ஊழியரை சந்தேகிக்க, சிலர் படப்பிடிப்புக் குழுவினரைச் சந்தேகிக்க, மற்ற சிலரோ இது தேவையற்ற குழப்பம் என்றும், படத்தைப் பற்றி ஏதாவது ஒரு பரபரப்பு கிளம்ப வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான குணசேகரன் இதைப் பற்றி சொன்னால்தான் உண்மை என்னவென்பது வெளிவரும்...