தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பூரி ஜெகன்னாத். தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். அவர் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். அந்த அலுவலகத்தைப் பற்றிய பேச்சுத்தான் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக உள்ளது. சுமார் 18000 சதுரை அடியில் 20 கோடி ரூபாய் செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போன்று அவருடைய அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாம். அதில் மினி தியேட்டர், பார், டிஸ்கஷன் ரூம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்.
அந்த அலுவலகத்தைப் பற்றி பூரி ஜெகன்னாத் கூறியதாவது, “இந்த அலுவலகத்தை கடந்த ஞாயிறு அன்று திறந்தேன், அதற்காக எனது நண்பர்களுக்கு சிறிய ட்ரீட் வைத்தேன்.
இது என்னுடைய தனிப்பட்ட இடம். இதை என்னுடைய அலுவலகம், வீடு, ரிசார்ட் என அழைக்கலாம். நான் இதை என்னுடைய குகை என்று கூட அழைப்பேன். ஏனென்றால் இந்த உலகம் காடு போன்றது, அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு குகை தேவைப்படுகிறது,” என்றார்.
தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'போக்கிரி' படத்தின் கதை இவருடையதுதான். தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் இயக்கியுள்ளார். படத்தில் காட்டும் பிரம்மாண்டத்தைப் போலவே அவருடைய அலுவலகத்திலும் பிரம்மாண்டத்தை காட்டி விட்டடார்.