விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி. சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது.
அதுவும் முடிந்து விட்டது. இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக்கா திரும்பியவரை திரும்ப அழைத்துக் கொண்டது சொந்த மாநிலமான கேரளா.
தமிழ் நாட்டில் திலகவதி போன்று கேரள மாநிலத்தின் முதல் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மாவின் வாழ்க்கை அங்கு டிரைவர் ஆன் டூட்டி என்ற பெயரில் திரைப்படமாகிறது. இதில் குட்டியம்மாவாக நடிக்கப்போகிறவர் அபிராமி. மனோஜ் பெல்லாவா இயக்குகிறார்.
சதாரண சப்-இன்ஸ்பெக்டராக போலீஸ் துறைக்குள் நுழைந்து ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த துறையில் துணிச்சலுடன் போராடி குட்டியம்மா எப்படி ஜெயித்தார் என்கிற கதை. இதற்காக அபிராமி இப்போது குட்டியம்மாவின் வாழ்க்கையை படித்து வருகிறார். அவரது மேனரிசம், நடை உடை பாவனைகளை கற்று வருகிறார்.