நடிகர் கார்த்தி திடீரென மயங்கி விழுந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி கொண்டார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் சரியாக போகாத நிலையில், தனது அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார், விரைவில் இவரது நடிப்பில் மெட்ராஸ் என்ற படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று(ஜூலை 28 ம் தேதி) நடிகர் கார்த்தி, அவரது வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் சாப்பிட்ட உணவு புட் பாயிஸனாகிவிட்டதாகவும், அதனால் தான் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறினர். கார்த்திக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துள்ளனர்