சிங்கம்-2 படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் அஞ்சான். முதன்முறையாக லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாளிலேயே சுமார் 10 லட்சம் பேர் இந்த டீசர் ரசித்துள்ளனர். இம்மாதம் ஆடியோ ரிலீஸ் நடக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
அஞ்சான் படத்தில் சூர்யா, ராஜூபாய், கிருஷ்ணா என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் ஒருவேடம் தாதா கேரக்டர்.அஞ்சான் படம் ஒரு அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கிறது. காக்க காக்க, சிங்கம், சிங்கம்-2 படங்களை காட்டிலும் சூர்யாவின் ஆக்ஷ்ன் இதில் பெரிதும் பேசப்படும்.
அஞ்சான் படம் 100 சதவீதம் மும்பையில் எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் ஜூன் வரை சூர்யா கால்ஷீட் மொத்தத்தையும் அஞ்சான் படத்திற்கு கொடுத்து நடித்து முடித்துள்ளார்.