பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் 'ஜிகர்தண்டா'. மதுரை கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த்-லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்துள்ளனர். சித்தார்த் முதன் முறையாக தனது பிளேபாய் இமேஜை மாற்றி ஆக்சன் ஹீரோவாக அவதரித்துள்ள இந்த படம் பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது.
இந்நிலையில், வருகிற 25-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது ஒரு வாரம் தள்ளி ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காரணம், தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால், அந்த படத்தை தற்போது திரையிட்டுள்ள முக்கிய திரையரங்கு உரிமையாளர்கள் இப்போதைக்கு வேறு படத்தை திரையிடும் நிலையில் இல்லையாம். அதனால் சிறிய அளவிலான தியேட்டர்கள் மட்டுமே ஜிகர்தண்டாவுக்கு கிடைக்கும் நிலை உள்ளதாம்.
ஆனால், அந்த தியேட்டர்களில் படத்தை வெளியிட்டால் படத்தின் வெற்றியும், வசூலும் பாதிக்கும் என்பதால், இப்போது ஒரு வாரம் படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். ஆக, ஜிகர்தண்டாவிற்கு முன்பே தனது வேலையில்லா பட்டதாரியை வெளியிட்டு ஒரு வாரமாவது வசூல் பார்த்து விட வேண்டும் என்று தனுஷ்தரப்பு நினைத்த நிலையில், இப்போது வேலையில்லா பட்டதாரியை கண்டு ஜிகர்தண்டா பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.