சுவை நிறைந்த அடுக்கு பலகாரம் (Kuih Lapis) செய்முறை.

தேவையான பொருட்கள்.
3 கப் தேங்காய் பால்
1/4 கப் அரிசி மாவு
1 1/2 கப் மைதா மாவு
1/4 கப் சோள மாவு
1/2 கப் சக்கரை
1 தேக்கரண்டி உப்பு
சிவப்பு வர்ணம் (உணவுக்காக பயன்படுத்துவது)
ரோஸ் எசன்ஸ் (தேவையானால்)

செய்முறை.

* பின்பு ரோஸ் எசன்ஸ்,சிவப்பு வர்ணம், தவிர எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து  கொள்ளவும்.

* கலவையை இரண்டாக பிரித்து ஒரு கலவையில் சிவப்பு வர்ணம், ரோஸ் எசென்ஸ் இரண்டையும் கலந்து கொள்ளவும். இன்னொரு கலவை வெள்ளையாகவே இருக்கட்டும்.
* இது வேக வைக்கும் முறையில் செய்யக்கூடிய பலகாரம். ஆகையால் வேக வைக்கக்கூடிய தட்டில் கொஞ்சம் மார்ஜெரின் அல்லது எண்ணெய் பூசி அடுப்பில் வைக்கவும்.

* இப்பொழுது வெள்ளையான கலவையில் இருந்து 2 தோசைக்கரண்டி அளவு எடுத்து சூடாகியுள்ள தட்டில் ஊற்றவும். இதனை 6 முதல் 8 நிமிடங்களுக்கு விட்டுவிடவும். பிறகு இதே அளவு போல் சிவப்பு வர்ண கலவையை ஊற்றி வேகவிடவும். மீதமுள்ள கலவையையும் இதே போல் மாற்றி மாற்றி செய்யவும்.

குறிப்பு :- உங்களுக்கு விரும்பிய நிறத்தில் இதை செய்யலாம்.எல்லா அளவைக்கும் ஒரே அளவான கப் பயன்படுத்தவும்.