உணவு வகைகளை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்.

எமக்கு இலகுவான நேரம் உணவு பொருட்களை வாங்கி பிரிட்ஜில் பாதுகாத்து வைப்பதன் மூலம் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால் எமக்கு நேரமும், வேலையும் குறையும். ஆனால் அவற்றை சரியான முறையில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே வைக்க வேண்டும்.அதிக காலம் வைத்திருப்பதால் அவை கெட்டு போகாமல் பாதுகாக்கப்படலாம்,ஆனால் எமது உடல் நோய் நிறைந்ததாக மாறி விடும்.எனவே எந்த உணவு வகைகளை எவ்வளவு காலம் பிரிட்ஜில் வைத்து பாவிக்கலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.

காய்கறிகள்:
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,
தக்காளி 1-2 நாட்கள்
புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் ஒரு வாரம்
காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்
காளான் 1-2 நாட்கள்

பழங்கள்:
அன்னாசி (முழுசாக) 1 வாரம்
(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்
திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள்கள் ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

பால் பொருட்கள்:
தயிர் 7-10 நாட்கள்
பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்
பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்
மோர் 2 வாரங்கள்

அசைவ உணவுகள்:
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
சமைத்த மீன் 3-4 நாட்கள்
வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்
சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்
பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்
உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்