துணி அலமாரியை நல்ல முறையில் ஒழுங்குபடுத்தி பராமரிக்க கீழ்கூறிய வழிகள் உதவியாக இருக்கும்.
இடத்தை காலி செய்யவும் முதலில் துணி அலமாரியில் உள்ள அனைத்தையும் எடுத்து விட வேண்டும். இவ்வாறு முதலில் இருந்து ஆரம்பிக்கும் போது, ஒரு துணியை வைத்து உட்புறத்தை நன்கு துடைத்துக் கொள்ளவும். மேலும் மூலை முடுக்குகளில் தான் அதிக தூசியும், அழுக்கும் அடைந்திருப்பதால், அந்த இடங்களை துடைக்க விட்டு விட வேண்டாம்.
துணி அலமாரியில் இருக்கும் டிராயர்களை கழற்றி எடுக்க முடிந்தால், அதை வெளியில் எடுத்து துணியை வைத்து நன்கு துடைத்துக் கொள்ளவும். பின் நறுமணம் வீசும் சில பொருட்களை அந்த டிராயர்களில் வைத்து விட வேண்டும்.
பூச்சிகளில் இருந்து பாதுகாக்க ஃபீனால்ப்த்தலீன் உருண்டைகளை பயன்படுத்தினால், அவைகளை அப்படியே உள்ளே வைக்க வேண்டாம். அவைகளை ஒரு பிளாஸ்டிக் பைகளில் நன்றாக சுருட்டி உள்ளே தொங்க விட வேண்டும். ஹேங்கர்களை (உடை மாட்டி) சீர் செய்தல் துணி அலமாரியை துடைத்தப் பின்னர், எடுத்தவுடனே பொருட்களை அடுக்குவதில் போகக் கூடாது. மாறாக எப்படி அடுக்கினால் வசதியாகவும், பார்க்க அழகாகவும், பராமரிக்க சுலபமாகவும் இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதனால் முதலில் ஹேங்கர்கள் எல்லாம் ஒரே அளவில், ஒரே வடிவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
இப்போதெல்லாம் இடத்தை அடைக்காமல் இருக்கவும், துணி அலமாரியில் அதிக இடம் கிடைக்கும் வண்ணமும் சில விசேஷ வகையான ஹேங்கர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அழகான ஒரே வடிவத்தில் உள்ள ஹேங்கர்கள் சிலவற்றை வாங்கி துணி அலமாரியில் மாட்டி விடலாம். துணைப் பொருட்களை சீர் செய்தல் இரண்டு வகையான பொருட்களை அடுக்குவதைப் பற்றி இங்கே பார்ப்போம். முதலில் நெக்லஸ்கள், கம்மல்கள், வளையல்கள், ப்ரேஸ்லெட்கள், பர்ஸ் மற்றும் பல வகையான சிறிய பொருட்களாக இருந்தாலும் முக்கியமான பொருட்களை அடுக்க அலமாரியின் டிராயர்களில் இடம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். கம்மல்களையும், நெக்லெஸ்களையும் வைத்துக் கொள்ள ஒரு சின்ன அழகான நகை பெட்டியை வாங்கிக் கொள்ள வேண்டும். அதே போல் வளையல்களையும் ,ப்ரேஸ்லெட்களையும் அடுக்க ஒரு வளையல் பெட்டியை வாங்கிக் கொள்ளவும். அடிக்கடி எடுப்பதால், பர்சை கண்ணில் தெரியும்படி ஒரு மூலையில் வைக்கலாம். இரண்டாவதாக பெல்ட், கழுத்து துண்டு மற்றும் பைகளை எடுக்க சுலபமாக இருக்க வேண்டும் என்பதால் அவைகளை அலமாரியின் கதவுகளுக்கு பின்னால் மாட்டி விடவும்.
துணிகளை தொடர்புடையதாக பிரித்துக் கொள்ளவும் துணிகளை தொடர்புடையதாக பிரித்து வைப்பதில் மிகுந்த சிரத்தை எடுக்க தேவை இல்லை. அதை மேலோட்டமாக செய்தால் போதுமானது. துணிகளை மேலாடைகள், பாவாடைகள், பேண்ட் மற்றும் இதர வகைகள் என்று பிரித்துக் கொள்ளலாம். துணிகளை அடுக்கும் போது அழுக்குத் துணிகளை துவைப்பதற்கு, அதை அழுக்குக் கூடையில் போட்டு விடவும். துணிகள் கிழிந்திருந்தாலோ அல்லது தைக்கப்பட வேண்டியிருந்தாலோ, அதனை தனியாக ஒரே வரிசையில் அடுக்கி வைக்கவும். நல்ல சுத்தமாக சலவை செய்த துணிகளை அடுக்கும் முன், அவைகளுக்கு இஸ்திரி போட்டிருக்க வேண்டும். புடவைகள், சூட்கள், ஆண்களின் சட்டைகள் மற்றும் பேண்ட்கள், மற்றும் இதர துணிகலான ஜாக்கெட்கள் மற்றும் கோர்ட்களை ஹேங்கரில் தொங்க விடவும்.
வண்ணங்களின் படி அடுக்குதல் அலமாரியை முழுமையாக சீரமைக்கப்பட்டதை போல காட்சி அளிக்க வேண்டுமா? மேற்கூறிய அனைத்தையும் செய்து விட்டு, துணிகளை வண்ணங்களின் படி அடுக்கி வைக்கவும். இது அழகை கூட்டுவதோடு, சுறுசுறுப்பான நாட்களில் தேவையான துணிகளை வேகமாக தேர்ந்தெடுக்க உதவி செய்யும். தேவையான வண்ணத்தை முடிவு செய்து விட்டால் போதும், மற்ற ஆடைகள் கலையாமல், நேரடியாக அந்த வகை வண்ணம் கொண்ட ஆடைகள் இருக்கும் இடத்திலிருந்து சுலபமாக ஆடையை தேர்ந்தெடுக்கலாம்.