கலர் கலர் கலராய் ஆடைகள், வண்ண வண்ண வளையல்கள் என உலா வரும் பெண்களே வளையல்கள் அணியும்போது அதற்அதற்கென சில முறைகள் உண்டு. அது தவறும்போது அழகை அது குறைத்து விடவும் கூடும். முதலாவது உங்களிடம் வண்ண வளையல்கள் பல டிசைன்களில் இருக்குகிறதா?
அதை வெள்ளை ரிசூவில் சுற்றி பெட்டியிலே வைத்து பாதுபாதுகாப்பாக வையுங்கள். இதனால் பொருளின் உபயோகக் காலம் கூடும்.
மற்றது நாம் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான நாம் ஆணியும் வளையல்களைத் தெரிவு செய்யவேண்டும். இன்று சந்தையிலே பலவித வளையல்கள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றது.
உதாரணம், கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக் என ஏராளம். நாம் புடவை அணியும் சந்தர்ப்பங்களில் கை நிறைய வளையல்களை அணியலாம். சுடிதார் அணியும் பெண்கள் அளவாக வளையல் போடலாம்.
ஜீன்ஸ் அணியும் பட்சத்தில் ஓரிரு வளையல்களை போட்டால் எடுப்பாக இருக்கும். நாம் அணியும் ஆடைகளில் எத்தனை வர்ணங்கள் உள்ளதோ அத்தனை வர்ணத்திலும் ஒவ்வொரு வளையல் தெரிவுசெய்து அணியும்போது அது அழகாகக் காட்சி தரும். வைபவங்களுக்கு அணியும் வளையல்கள் கொஞ்சம் மினுமினுப்பாக இருந்தால் அழகாய் இருக்கும். கற்கள் பதித்த வளையல்கள் பட்டுச்சேலைக்கு பொருத்தமாய் இருக்கும். எப்படியும் ஒற்றை வளையல் அணியும்போது விரல்களுக்கு மோதிரங்களை குறைத்து போடவேண்டும்.