அழகான, பொருத்தமான காதணி அணிவோம்.

 தினமும் காதுகளை அழுந்த தேய்த்து சுத்தப்படுத்துங்கள். காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப்பினால் சரி செய்து கொள்ளலாம்.

நீளக் காது என்றால் ஃபவுண்டேஷன் போட்டு சிறிதாக காட்டலாம். விதவிதமான காதணிகளால் அலங்கரிக்கலாம். காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால் பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங்கள்.
சின்ன காது என்றால் காது மடல்களில் 2, 3 துளை போட்டு சின்னச் சின்ன வளையங்களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடு அல்லது தொங்கட்டான் போடலாம்.குண்டு முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இருக்கும்.கழுத்தில் மெலிதான செயின் என்றால் காதணியை சற்று பெரிதாக அணிந்து கொள்ளுங்கள்.காதோரம் குட்டிக் குட்டித் தோடுகள் அழகாக இருக்கும்.

அகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின்கீழ் ஒன்று வரும் குடை ஜிமிக்கிகள், பெரிய வளையங்கள் போடலாம். கழுத்து நீளம் குறைவென்றால் காதணி நீளத்தை குறைக்கவும். காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங்கட்டான்கள், வளையங்கள் முக அழகை கூட்டும். விழாக்களுக்கு செல்லும்போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக்கொண்டால் அழகுதான்.