பல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
ஆனால் இன்று ஹேக்கிங் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது.
அந்த வகையில் உங்களது ஐபோனை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் சில எளிய வழிமுறைகளை இதோ,
1. இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை பாதுகாப்பில்லாமல் வைப்பது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது தான் உண்மை. அதனால் டச் ஐடி (Touch ID)அல்லது பாஸ்கோடு லாக் (Pass code Lock)பயன்படுத்தலாம்
2. நான்கு இலக்கு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தலாம். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் சென்று டச் ஐடி மற்றும் பாஸ்கோடு ஆப்ஷனை க்ளிக் செய்து சிம்பிள் பாஸ்கோடை ஆஃப் செய்ய வேண்டும், இதையடுத்து உங்களால் பெரிய கடவுச்சீட்டை செட் செய்து கொள்ள முடியும்.
