'எதிர் நீச்சல்' படத்தின் கூட்டணியான துரை செந்தில்குமார், சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள 'காக்கி சட்டை' படத்தின் டிரைலர் நேற்று முன்தினம்(ஜன., 10) வெளியிடப்பட்டது. டிரைலரைப் பார்த்ததுமே பலருக்கும் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்க வாய்ப்புள்ளது. சிவகார்த்திகேயன், விஜய் இடத்திற்கு ஆசைப்படுவதைப் போலவே அந்தப் படத்தின் டிரைலரும் அமைந்துள்ளது. கொஞ்சம் கோமாளித்தனமாக காமெடி ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் விஜய் நடிப்பையும், மேனரிசத்தையும் காப்பி அடித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
டிரைலருக்கு அதிக ஹிட்ஸ் வாங்க வேண்டுமென்பதற்காக அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த, “தலை ஸ்டைல்ல சொல்லணும்னா, இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்” என சிவகார்த்திகேயன் பேசும் டயலாக்கையும் டிரைலரில் இணைத்துள்ளனர். அவர்களின் எண்ணம் சரியாக நிறைவேறியது. நேற்றே, எண்ணற்ற அஜித் ரசிகர்கள் டிரைலரை ஷேர் செய்தும், லைக் கொடுத்தும் பரப்ப ஆரம்பித்தனர்.
இப்போதுதான் நான்கைந்து படங்களில் நடித்து ஓரளவிற்கு முன்னேறி வரும் சிவகார்த்திகேயன் அதற்குள்ளாகவே ஆக்ஷன் ஹீரோவாக ஆசைப்பட்டு இந்தப் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனை இந்தக் கால பாக்யராஜாகத்தான் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
ஆனால், அவரோ அந்தக் கால ரஜினியையும், இந்தக் கால விஜய்யையும் தனக்குள் கொண்டு வரப் பார்க்கிறாரோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. திரையுலகத்திற்குள் நுழையும் எல்லாருக்குமே ரஜினியாக வேண்டும், விஜய், அஜித் போல ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். ஆனால், தனிப் பாதையை வகுத்துக் கொள்ளாமல், அடுத்தவர் பாதைக்குள் செல்ல ஆரம்பிப்பது பாதாளத்திற்குள் தள்ளி விடும் என்பதை போகப் போகத் தெரிந்து கொள்வார்கள்.