அதிரடி நடிகையான அனுஷ்காவின் சினிமா கேரியரில் ஒரு மைல்கல் படமென்றால் அது ராணி ருத்ரம்மா தேவிதான். சாதாரணமாக ஒரு படத்தில் கதாநாயகி போர்ஷன் என்றால் அதிகபட்சம் 10 அல்லது 15 நாட்கள்தான் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அனுஷ்காவே ஹீரோ போன்று லீடு ரோலில் நடித்ததால் இந்த ஒரு படத்துக்காக மட்டுமே 150 நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்தார்.
சரித்திர பின்னணி கதை என்பதால் அந்த காலகட்டத்து காஸ்டியூம், அணிகலன்களை உடம்பில் அணிந்து கொண்டு நடித்ததோடு, வாள் சண்டை காட்சிகளிலும் பிரமிக்கத்க்க நடிப்பை வெளிப்படுத்தினார் அனுஷ்கா. ஆனால் அப்படி அவர் கடைசிகட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, ஒரு நாள் அனுஷ்கா-வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியில் ஒருவர் கம்பால் தாக்கியது அனுஷ்காவின் கையில் பலமாக பட்டு விட்டதாம்
இதனால் அடிபட்ட இடத்தில் ரத்தம் வழிந்ததோடு வலியில் சிறிது நேரம் துடித்தாராம். ஆனால் அதையடுத்து அவரை கேரவனுக்குள் சென்று ஓய்வெடுக்குமாறு சொன்னபோது, அதற்கு மறுத்து விட்ட அனுஷ்கா, இதே வேகத்தோடு இந்த காட்சியில் நடித்து முடித்து விடுகிறேன் என்று அலட்டிக்கொள்ளாமல் அடுத்த ஷாட்டுக்கு தயாராகி விட்டாராம். இப்படி ராணி ருத்ரம்மா தேவி படப்பிடிப்பில் பலமுறை கை, காலில் அடிபட்டு வேதனையை அனுபவித்தபோதும், கடமையே கண்ணாக இருந்திருக்கிறார் அனுஷ்கா.
அதனால் இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், அனுஷ்காவின் இந்த பெருமைகளை சொல்லி வரும் அப்படக்குழுவினர். அவர் நடித்த வேடத்தில் இன்னொரு நடிகை நடித்திருந்தால் படப்பிடிப்பு பலதடவை ரத்தாகி, குறிப்பிட்ட நாட்களை விட அதிக நாட்கள் ஆகியிருக்கும். அனுஷ்கா நடித்ததால் மட்டுமே குறித்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்த முடிந்தது எனறு ஐதராபாத மீடியாக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.