பொல்லாதவன், ஆடுகளம் என வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இரண்டு படங்களுமே மெகா ஹிட். அதிலும் ஆடுகளம் தனுசுக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அதனால் அவர்களது கூட்டணி ராசியானதாகி விட்டது. அதையடுத்து சிம்புவைக்கொண்டு வடசென்னை என்றொரு படத்தை தொடங்கினார் வெற்றிமாறன். ஆனால் அவர்களுக்கிடையே என்ன மோதல் நடந்ததோ, அந்த படம் ஆரம்பத்திலேயே கிடப்பில் போடப்பட்டது.
அதனால், மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்க மீண்டும் களமிறங்கிய வெற்றிமாறன், மீண்டும் தனுஷையே அழைத்தார். அதையடுத்து சூதாடி என்ற படத்தை தான் இயக்கிக்கொண்டிருப்பதாக ஒரு பட விழாவில் வெற்றிமாறனே சொன்னார். ஆனால், அப்போது அனேகன், வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப் என பல படங்களில் தனுஷ் நடித்துக்கொண்டிருந்ததால். இவர் கேட்ட நேரத்திற்கு அவரால் கால்சீட் கொடுக்க முடியவில்லையாம்.
அதனால் தனுசுக்காக காத்திருக்க முடியாமல் அட்டகத்தி தினேஷை வைத்து குற்ற விசாரணை என்ற படத்தை தொடங்கினார் வெற்றிமாறன். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தான் நடித்து வந்த படங்களை முடித்து விட்டு ப்ரீயாகி விட்டார் தனுஷ். ஆனால் இந்த நேரத்தில் வெற்றிமாறன் ப்ரீயாக இல்லை குற்ற விசாரணையில் பிசியாக இருக்கிறார்.
அதனால், அடுத்து தனுஷ், சூதாடியில் நடிப்பதற்கு முன்பே ஏற்கனவே கமிட்டாகியிருக்கும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்திற்கு கால்சீட் கொடுப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க தனுஷ் எப்போது கால்சீட் கொடுப்பார் என்று சில மாதங்களாகவே காத்துக்கொண்டிருக்கிறார் காஜல்அகர்வால். காரணம், ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களுக்குப்பிறகு தமிழில் தனக்கு விழுந்த இடைவெளியை இந்த படம் மூலம் குறைத்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்