90களில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை முன்னணி நடிகையாக விளங்கியவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, அஜித் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் நடித்தவர்.
கடந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தில் நடித்து அடுத்த இன்னிங்ஸுக்கும் ரெடியாகிவிட்டார்.சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி அளித்த மீனா, அவருடன் நடித்த நடிகர்களைப் பற்றியும், அவருடைய திரையுலக வாழ்க்கையைப் பற்றியும் சுவாரசியமான சில தகவல்களைப் பகிர்ந்து கெண்டார். பல நடிகர்களுடன் மீனா ஜோடியாக நடித்திருந்தாலும் விஜய்யுடன் மட்டும் ஜோடி சேர்ந்து நடிக்கவேயில்லை.
ஆனால், விஜய் நாயகனாக நடித்த 'ஷாஜகான்' படத்தில் 'சரக்கு வச்சிருக்கேன்...' என்ற பாடலில் மட்டும் விஜய்யுடன் சேர்ந்து நடனமானடியுள்ளார் மீனா. அந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது, யார் நன்றாக நடனமாடுவது என இருவருக்குள்ளும் போட்டி இருக்குமாம். படப்பிடிப்புக்கு முன்பு ரிகர்சலில் இருக்கும் போது, நான் என்ன செய்வேன் என அவர் பார்ப்பார், அவர் என்ன செய்வார் என நான் பார்ப்பேன்...பாடல் படமாக்கப்பட்ட போது இருவருமே கொஞ்சம் எக்ஸ்ட்ரா மூவ்மெண்ட்டுடன் நடனமாடி அசத்தினோம் என்றார் மீனா. அந்தப் படம் வெளிவந்த போது தொலைக்காட்சிகளில் பல முறை ஒளிபரப்பப்பட்ட பாடல் அது.
அதோடு இன்னொரு ரகசியத்தையும் வெளியிட்டார் மீனா. விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகை மீனாதானாம். அதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் என மீனாவுடன் தொலைக்காட்சிப் பேட்டியில் கலந்து கொண்ட நடன இயக்குனர் கலா தெரிவித்தார். ஆனால், மீனாவுக்குப் பிடித்த நடிகர் யார் தெரியுமா...சின்ன வயதிலிருந்தே மீனாவுக்கு ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனைத்தான் பிடிக்குமாம். இப்போதும் ஹிருத்திக் என்றால் எனக்கு ஒரு 'க்ரஷ்' உண்டு என்கிறார் ஒரு பெண் குழந்தைக்குத் தாயான மீனா...