மாஜி நடிகை ராதாவின் கலைவாரிசுகள் கார்த்திகா- துளசி நாயர். இதில் கார்த்திகா கோ படத்திலும், துளசி கடல் படத்திலும் என்ட்ரி ஆனபோது பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டவர்கள். அதோடு 1980 களில் அம்பிகா-ராதா சகோதரிகள் தென்னிந்திய சினிமாவை கலக்கியதைப் போன்று இந்த சகோதரிகளும் கலக்காமல் ஓயமாட்டார்கள் என்றெல்லாம் கோடம்பாக்கமே எதிர்பார்த்தது.
ஆனால், கோ படத்திற்கு பிறகு கார்த்திகா போட்ட சில அதிரடி கண்டிசன்களால் அவரிடம் கதை சொல்லியிருந்த டைரக்டர்கள் தெறித்து ஓட்டம் பிடித்தனர். அதற்கடுத்து தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவர் நடித்த அன்னக்கொடி படம் தோல்வியடைந்து கார்த்திகாவின் மார்க்கெட்டை காலி பண்ணியது. அதேபோல் கடல் படம் தோல்வியடைந்து துளசிக்கும் படமே இல்லாத நிலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது கார்த்திகா புறம்போக்கு படத்தில் நடித்து வர, துளசி நாயர் நடித்துள்ள இரண்டாவது படமான யான் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை சமீபத்தில் கேரளா சென்றிருந்தபோது பார்த்து ரசித்த கார்த்திகா, தங்கை துளசிநாயரின் நடிப்பை பக்கம் பக்கமாக மீடியாக்களிடம் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். நிஜத்தில் எனது தங்கை என்றாலும் நடிப்பில் எனக்கே அக்காவாகி விட்டார். அப்படியொரு பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறார் என்று துளசியின் நடிப்பு பற்றி கூறியுள்ள கார்த்திகா, எதிர்காலத்தில் துளசி ரொம்ப பெரிய நடிகையாக வருவார் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.