பெண்களை தாக்கும் உடல் உபாதைகள்.

சுறுசுறுப்பான செயல்பாடுகள், சமச்சீரான உணவு ஆகியவை முதுகுவலியையும், சோர்வையும் கட்டுப்பாட்டில் வைக்கும். பாலிசிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி).... விடாது துன்புறுத்தும் முதுகுவலியும், சோர்வும் ஏற்படுகின்றன.
ஹைப்போதைராய்டிசம்..... உடலியல் செயல்பாடுகளுக்கு (மெட்டபாலிசம்) முக்கியமான தைராய்டு ஹார்மோனை தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் போது ஹைப்போதைராய்டிசம் ஏற்படுகிறது.
சோர்வு, மனஅழுத்தம், உடல் எடை கூடுவது, குளிர் தாங்காமை போன்றவை ஹைப்போதைராய்டிசத்தின் அறிகுறிகள்.

முதுகு வலி..... நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரியும் பெண்களுக்கு விடாது துன்புறுத்தும் முதுகுவலியும், சோர்வும் ஏற்படுகின்றன. சுறுசுறுப்பான செயல்பாடுகள், சமச்சீரான உணவு ஆகியவை முதுகுவலியையும், சோர்வையும் கட்டுப்பாட்டில் வைக்கும்.

முடி உதிர்வு.... உடல்ரீதியான, உணர்வுரீதியான நெருக்கடி முடி வளர்ச்சியைப் பாதிக்கிறது. பலவீனமடையும் அவை, முடி வாரும்போது எளிதில் உதிர்ந்துவிடுகின்றன. சத்தான உணவு, தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மனஅழுத்தம்... எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட முடியாமை, குறிப்பிட்ட டெட் லைனுக்குள் வேலையை முடிக்க இயலாமல் போவது, வீட்டு வேலைகளால் ஏற்படும் நெருக்கடி போன்றவை ஒன்று சேர்ந்து பெண்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி, மனஅழுத்தத்துக்கு வித்திடுகின்றன.