காதலில் விழுந்தேன் சுனைனாவை நீர்ப்பறவை சறுக்கி விட்டதால் சிலகாலம் காணாமல் போனவர், தற்போது ஸ்ரீகாந்தின் நம்பியார், விஜயசேதுபதியின் வன்மம் படங்கள் மூலம் மீண்டும் எழுந்து வருகிறார்.
இதில் நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம் ஆகிய இருவரின் கேரக்டர்களும் இரண்டு ஹீரோக்களைப் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், வன்மம் படத்தில் விஜயசேதுபதி- கிருஷ்ணா என இரண்டு ஹீரோக்கள். இந்த இரண்டு படங்களிலுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சுனைனா.
நம்பியார் படத்தில் சிட்டி கேர்ள் வேடத்தில் நடித்திருப்பவர், வன்மம் படத்தில் வில்லேஜ் கெட்டப்பில் நடித்திருக்கிறார். கிருஷ்ணாவை காதலிக்கும வேடம் என்றாலும், அதிரடியான கதைக்களம். அதனால் சுனைனாவின் ரோலுக்கும் கதையில் பெரும் பங்கு உள்ளதாம்.
இந்த படத்தில் நடித்தது பற்றி சுனைனா கூறுகையில், நான் இதுவரை நடித்ததில் வன்மம் புதுமையான கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடித்துள்ள விஜயசேதுபதி- கிருஷ்ணா இருவருமே போட்டி போட்டு நடித்தனர். அதைப்பார்த்து, எனக்கு இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு, முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கூடுதல் ஸ்கோர் பண்ணினேன்.
அதற்கு விஜயசேதுபதி- கிருஷ்ணா இருவருமே எனக்கு உறுதுணையாக இருந்தனர். சில காட்சிகளில் நடிக்கிறபோது அவர்கள் சார்பில இருந்தும் எனக்கு டிப்ஸ் கொடுத்தார்கள். அது எனக்கு பெரிய உதவியாக இருந்தது என்கிறார் சுனைனா.

cinema,sunaina, srikanth, vijayasethupathi, nambiyar, krishna, vanmham