பெருங்காயத்தின் மருத்துவ குணம்.

பெருங்காய செடிகளின் பெரிய வேர்கள் மேல் பாகத்தில் 6 அங்குல சுற்றளவு உள்ளவை. பெருங்காய செடி 4 – 5 வருடம் வளர்ந்த பின், இதன் தண்டு மற்றும் வேரையும் கீறி விட்டால் பெருங்காய பிசின் கசியும். அதை எடுத்து மண் பாண்டங்களில் பக்குவப்படுத்தி காய வைத்து கிடைக்கும் பொருள் பெருங்காயம்.

பெருங்காயத்தின் பயன்கள்
பெருங்காயத்தை ஒரு துணியில் கட்டி, வீட்டின் ஒரு மூலையில் கட்டி தொங்க விடுவது பழங்கால பழக்கம்.இதன் வாசனை, வியாதிகளை விரட்டும் என்ற நம்பிக்கை.

வாயுக் கோளாறுகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்து. நெய்யில் வறுத்து கொடுக்க, பசி எடுக்கும், வயிறு உப்புசம் குறையும். வயிற்று வலி குறையும்.

வாயுத் தொல்லைக்கு ஒரு டம்ளர் மோரில் ஒரு கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி உப்பை கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும். ஜீரண சக்தியை தூண்டும்.

 பெருங்காயப் பொடியை எண்ணையில் வறுத்து அதை எலுமிச்சை இலைகளோடு கலந்து விழுதாக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை பெருங்காயம் போக்கும்.

ஆஸ்த்மா, தொடர் இருமல் பாதிப்புக்கு சிறிய அளவு பெருங்காயம், 2 டீஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் வெங்காய சாறு, வெற்றிலைச் சாறு ஒரு டீஸ்பூன் – இவற்றை கலந்து குடிக்கலாம்.

வெளிப்பூச்சுக்கு
பெருங்காயம் + சுக்கு – சம அளவு எடுத்து, பொடித்து, தண்ணீரில் விட்டு அரைத்துக் கொள்ளவும். இதை சூடாக்கி, இளம் சூட்டில் வலி இருக்கும் மூட்டுப் பகுதிகளில் தடவவும். இதை தொடர்ந்து சில நாட்கள் செய்யவும்.
வாய்வுக் கோளாறு காரணமாக வரும் வயிற்று வலிக்கு – பெருங்காயப் பொடியை தண்ணீரில் கலந்து, சுட வைத்து வயிற்றில் தடவ, வலி குறையும்.