இதன் பெயரை பிரித்தால் – சீர் + அகம் – உடலின் உட்புறத்தை சீராக வைக்கும் என்று பொருள் படும். சீரகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியிருக்கலாம்.
சீரகச் செடி ஒரு சிறிய, 1/2 அடி வளரும் செடி. சீரகத்தில் 5 வகைகள் உண்டு. அவை – நற்சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு), கருஞ்சீரகம், காட்டு சீரகம் மற்றும் பளப்பு சீரகம். முதல் இரண்டு வகைகளும் சமையலில் பயன்படுத்தப்படுபவை. அடுத்த இரண்டும் மருந்துகளாக பயனளிப்பவை. கடைசி ரகம் காரம் நிறைந்த வெளிநாட்டு சரக்காகும்.
சீரகத்தின் வீட்டு மருத்துவ உபயோகங்கள்
உள்ளுக்கு – மிளகைப் போலவே வயிற்றை சீரகம் சீராக வைக்கும். பசியின்மை, பிரட்டல், வாந்தி, வயிறு உப்புசம் (கேஸ் – வாய்வு) மலச்சிக்கல், ஏப்பம், வயிற்றுப் பூச்சிகள் இவற்றை போக்கும்.
பசியெடுக்க – சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊற வைத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை பொடியாக்கி தேனுடன் (அ) சர்க்கரையுடன் கலந்து 5 கிராம் தினம் இரு வேளை சாப்பிட்டு வர நல்ல பசி உண்டாகும். இதை வாந்தி நிற்கவும் கொடுக்கலாம்.
சீரகத்தை பொடித்து களிம்பாக்கி முகத்தில் தடவ, முகம் பொலிவடையும். களிம்பை, தோல் வீக்கங்களுக்கும், வலிக்கும் இடங்களிலும் தடவலாம்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் முகத்தை கழுவ, முகம் மாசு மருவின்றி பிரகாசிக்கும். அரிப்பு, நமைச்சல், இவற்றுக்கும் சீரகத் தண்ணீரை ஊற்றி கழுவலாம்.
ஐந்து கிராம் சீரகத்தை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி கஷாயமாக்கவும். இதை வடிகட்டி, வெது வெதுப்பான சூட்டில் குடித்து வந்தால், மலச்சிக்கல் அஜீரணம், வாய்வுத் தொல்லை, இவை விலகும்.
குழந்தை பிறந்த பின், தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க 1/2 டீஸ்பூன் சீரகம் தேன் (அ) வெல்லத்துடன் கொடுத்து வரலாம். வயிற்றுக் கோளாறுகளும் சீராகும். சீரகப் பொடியை பால் (அ) நெய்யுடன் கொடுத்தாலும் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
ஐந்து கிராம் சீரகத்தால் செய்யப்பட்ட கஷாயத்தை தினம் இருவேளை, 10 நாள் சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட ஜுரம் குறையும்.
குளிர் ஜுரத்தில் ஏற்படும் நடுக்கத்தைப் போக்க 3 கிராம் சீரகத்தை வெற்றிலையில் சுருட்டி வாயில் அடக்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மெல்லவும்.
சீரகத்தை, இஞ்சி, தனியாவுடன் சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் தீராத தலை வலியும் தீரும். அளவுகள் சீரகம், தனியா, தலா அரை டீஸ்பூன். இஞ்சி இரு சிறிய துண்டுகள். கஷாயம் தயாரிக்க தண்ணீர் ஒரு டம்ளர்.
சிறுநீரக கற்கள் நீங்க சீரகப் பொடியை சர்க்கரையுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.