இன்னும் கொஞ்ச நாட்களுக்கு 'த்ரிஷ்யம்' படம் பற்றித்தான் செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். தமிழில் 'த்ரிஷ்யம்' ரீமேக்கிற்கு பூஜை போட்டதுமே, கேரள நீதிமன்றம் தடை, பாலிவுட் தயாரிப்பாளர் எதிர்ப்பு என பரபரப்பு கிளம்பி விட்டது. அதேசமயம், தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடித்து வெளிவந்த 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் வெற்றி பெற்று விட்டதால் அங்குள்ள சிலருக்கு அந்தப் படத்தை ஸ்ரீப்ரியாதான் இயக்கினாரா என்ற சந்தேகம் வந்துவிட்டதாம்.
தமிழில் ஸ்ரீப்ரியா சில படங்களை இயக்கியிருந்தாலும், தெலுங்குத் திரையுலகில் அவர் இயக்குனராக அறிமுகமாவது இதுதான் முதல் முறை. அப்படியிருக்க மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றிப் படத்தை வெங்கடேஷ் போன்ற முன்னனிணி நடிகரை வைத்து அவர் இயக்க ஆரம்பித்த போதே அங்குள்ளவர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாம். இந்த சூழ்நிலையில் படம் வெற்றி பெற்றதும், தெலுங்கு மக்களின் கலாச்சாரம், ரசனை பற்றி அவ்வளவாகத் தெரியாத ஸ்ரீப்ரியா எப்படி இந்த படத்தை தெலுங்கு மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இயக்கினார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாம்.
தெலுங்கின் முன்னணி திரைக்கதை எழுத்தாளர்களான பருச்சூரி பிரதர்ஸ் இந்த படத்தின் வடிவத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள் என்றும், படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கோபால் ரெட்டிதான், படத்தின் இயக்கத்ததை பெரும்பாலும் கவனித்துக் கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு பெண்மணி, அதிலும் 80களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் ஒரு படத்தை சிறப்பாக இயக்கி, அதை வெற்றி பெறச் செய்த பின்னும் இப்படி தேவையற்ற சர்ச்சைகளை அங்குள்ளவர்கள் உருவாக்குகிறார்கள் என ஒரு சாரார் சொல்கிறார்கள். ஸ்ரீப்ரியாவை பல முன்னணி இயக்குனர்களே பாராட்டி வருவதும், அவர் காலத்து நடிகைகளும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.