கடந்த வாரம் (ஜூலை 18) வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்துக்கு அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்ட வேலையில்லா பட்டதாரி முதல் மூன்று நாட்களில் மட்டும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் வசூல் நிலவரம் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே வேலையில்லா பட்டதாரி படம்தான் மிகப்பெரிய வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கினர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்ல, இந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்த கோலிசோடா உட்பட அனைத்து படங்களின் வசூலையும் வேலையில்லா பட்டதாரி படம் முறியடித்துவிட வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சும் அடிபடுகிறது.
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்த தனுஷுக்கு, வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி மிகப்பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள வேலையில்லா பட்டதாரி படம், வெளிநாடுகளிலும் முதல் வாரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளதாம். தனுஷ் நடித்த படத்திலேயே வெளிநாட்டில் மிகப்பெரிய வசூலை அள்ளிய படமும் வேலையில்லா பட்டதாரி படம்தானாம்.