தீயா வேலை செய்யனும் குமாரு படத்தையடுத்து சுந்தர்.சி இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தில், ஹன்சிகா மோத்வானி முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் சுந்தர்.சியும் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், சந்தானம், லட்சுமிராய், வினய், ஆண்ட்ரியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சந்திரமுகி பாணியில் ஒரு அரண்மனையில் நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஹன்சிகாவுக்கும், சந்தானத்துக்குமிடையே அந்த அரண்மனை யாருக்கு சொந்தம் என்பதை மையமாக வைத்துதான் கதை நகர்த்தப்பட்டுள்ளதாம். அந்த வகையில், திகில், காமெடி என இரண்டும் கலந்த ஒரு கதையில் படம் உருவாகியுள்ளதாம்.
மேலும், தற்போது விற்பனைக்கு தயாராகி விட்ட அரண்மனை இன்னும் விலைபோகவில்லையாம். காரணம். 22 கோடிக்கு படத்தின் விலையை சொல்கிறார்களாம். ஆனால், விநியோகஸ்தர்களோ 20 கோடியில் நிற்கிறார்களாம். அதனால் தொடர்ந்து நீயா நானா என்று பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் யாராவது ஒருத்தர் இறங்கி வந்தால் பேரம் படிந்து விடும் என்கிறார்கள்.