நேரான அழகிய கூந்தல் தேவையா?


கூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான்.

இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும். இப்போது கூந்தலை நேராக்க எந்த மாதிரியான ஹேர் பேக்குகளை போட வேண்டுமென்று பார்ப்போம்.ஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த செயலை மாதத்தில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.

ஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே நேராகிவிடும்.

ஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.

மற்றொரு வழியென்றால், கடைகளில் விற்கும் கண்டிசனர் தான். இந்த கண்டிசனர் கூட கூந்தலை நேராக்கும். ஆகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தப் பின்பு, கூந்தலுக்கு கண்டிசனரை தடவி சிறிது நேரம் கூந்தலுக்கு மசாஜ் செய்து, பின் அலச வேண்டும்.
வெந்தயக் கீரையின் சுவையும் மணமும் உங்களுக்கு தெரியும். அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது தெரியுமா?

தழையத் தழைய கூந்தலுடன் வளைய வரும் பெண்களை பார்க்கும் போது, பொறாமையாக இருக்கிறதா? கவலையை விடுங்கள். தலைமுடி யின் வளர்ச்சியைத் தூண்டும் அற்புத மருந்து வெந்தயக் கீரையில் இருக்கு!

2 கட்டு வெந்தயக் கீரை எடுத்து, காம்பை நீக்கிவிட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை சீடைக்கு உருட்டுவதுபோல உருட்டி, 2 நாள் வெயிலில் காய வையுங்கள் (உருண்டை உடைந்தாலும் பரவாயில்லை). கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி, மிதமான சூட்டில் இறக்கி அதில் இந்த உருண்டைகளைப் போடுங்கள். 10 நாட்கள் நன்றாக ஊறவிட்டு, வடிகட்டுங்கள்.

இந்த தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக்கொள்ளுங்கள். உடம்பு உஷ்ணம் குறைந்து தலைமுடி நீண்டு வளரத்தொடங்கும்.