அஜீத் நடித்த வாலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா. அக்கா நக்மா சிபாரிசால் சினிமாவுக்கு வந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். அன்று முதல் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் படங்களில் இணைந்து நடித்து காதல் வளர்த்தார்கள். அதன் பிறகு 2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்திற்கு முன் ஜோதிகா கடைசியாக நடித்த படம் மொழி. அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகினார். தற்போது சூர்யா, ஜோதிகா தம்பதிகளுக்கு 7வயதில் தியா என்ற மகளும், 4 வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர். இடையில் சில விளம்பர படங்களில் சூர்யாவுடன் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் நடிக்கப்போகிறார் என்கிற செய்திகள் வந்தது. அதையெல்லாம் மறுத்து வந்தார்கள்.
தற்போது 8 வருட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடிப்பது உறுதியாகிவிட்டது. மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்த ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. 40 வயதை கடந்த மஞ்சு வாரியாரின் அழகும், நடிப்பும் அனைவரையும் கிரங்க வைத்தது. அதற்கு சற்றும் குறைவில்லாத ஜோதிகா அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.
படத்தை தயாரிப்பது சூர்யாவேதான். அவரது 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மலையாளப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கேரக்டர்களில் ஜோதிகா நடிக்க முடிவெடுத்திருப்பதாகவும் அதன் தொடக்கமே இந்தப் படம் என்றும் கூறப்படுகிறது.

cinema, Jyothika, Surya, how old are you, manju warrier